( வி.ரி. சகாதேவராஜா) தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்திற் கமைவாக சிறுவர் பாதுகாப்புத் தொடர்பாக மாணவர்களுக்கான மாணவத் தூதுவர் மாவட்ட ரீதியான தமிழ்மொழி மூலமான நிகழ்ச்சித் திட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந் நிகழ்வானது உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்நிகழ்வை அம்பாறை மாவட்ட உள சமுக உத்தியோகத்தர் யூ.எல்.அசாடீன் ஒருங்கிணைப்பு செய்திருந்தார் .
அம்பாறை, சம்மாந்துறை காரைதீவு அம்பாறை மாவட்ட சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வளவாளர்களாக கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது காரைதீவு சம்மாந்துறை நிந்தவூர்.சாய்ந்தமருது ஆகிய பிரதேச பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்குபற்றி மாணவ தூதுவர் நிகழ்வு தொடர்பான பயிற்சியை பெற்றுக் கொண்டனர்.