(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) ஜனாதிபதி தேர்தல் 2024 இற்கான திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டமை தொடர்பாக மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டையில் அமையப்பெற்றுள்ள தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகத்திற்கு இதுவரை 6 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளது.
அரச உத்தியோகத்தர்களது இடமாற்றம் தொடர்பாக நான்கு முறைப்பாடுகளும், தேர்தல் தொடர்பான ஊர்வலம் தொடர்பாக ஒரு முறைப்பாடும், காணி பகிர்ந்தளித்தல் தொடர்பாக மற்றுமொரு முறைப்பாடும் பதிவாகியுள்ளது.இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள இம்முறைப்பாடுகள் தேர்தல் சட்டவிதி மீறல் குற்றத்தின் அடிப்படையில் சாதாரன தரமுடையவை எனவும், இதுதொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் அலுவலகம் மாவட்ட அரச ஊடகப் பிரிவிற்கு தகவல் தெரிவித்துள்ளது.