மன்னாரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இளம் தாயின் மரணம் தொடர்பாக விசாரணைகள் முன்னெடுப்பு.

(வாஸ் கூஞ்ஞ)

மன்னார் வைத்தியசாலையில் இடம்பெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக படிமுறையின்படி விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றது. குற்றம் இழைக்கப்பட்டிருந்தால் யாராக இரந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். ஆகவே தேவையற்ற வதந்திகளை வேண்டப்படாத செயற்பாடுகளை எவரும் முன்னெடுக்க வேண்டாம் என மன்னார் பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சார்பில் இதன் செயலாளர் எஸ்.ஜேம்ஸ் யேசுதாசன் , பிரபல வர்த்தகர் என்.நூர்டீன் , மற்றும் போதகர் எஸ்.பத்திநாதன் ஆகியோர் சனிக்கிழமை (03) நடாத்திய ஊடக சந்திப்பில் இங்கு செயலாளர் ஜேம்ஸ் கருத்து தெரிவிக்கையில்

மன்னார் பொது வைத்திசாலையில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவத்தை முன்னிட்டு மன்னார் மாவட்டத்தின் பொது வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் சார்பில் மக்களுக்கு ஒரு சில அறிவுறுத்தல்களை வழங்க வேண்டிய கட்டாயம் ஒன்று எற்பட்டுள்ளது.

நாங்கள் அறிந்திருக்கின்ற பிரகாரமாக சில நாட்களுக்கு முன்பாக இந்த வைத்தியசாலையில்  ஒரு துர்வஷ்டமான சம்பவம் ஏற்பட்டுள்ளது.

அதாவது ஒரு இளம் தாய் இவ்வைத்தியசாலையில் சந்தேகத்கிடமாக மரணத்துள்ளார். இச்செய்தி கேள்விப்ட்ட மறுகணமே எங்கள் இவ்வைத்தியசாலை அபிவிருத்திக் குழு இந்த வைத்தியசாலையின் பணிப்பாளரை நேரடியாக வந்து சந்தித்து கலந்துரையாடினோம்.

இந்த விடயம் தொடர்பாக அவர் எங்களுக்கு தெரிவிக்கையில் இச்சம்பவம் தொடர்பாக எங்கள் நிர்வாகத்தினால் விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி குழு என்ற ரீதியில் இடம்பெற்றுள்ள இந்த சம்பவம் தொடர்பாக நாங்களும் விழிப்பாக இருந்து நீதியான முறையில் செயல்பட வேண்டும் என்ற நிலையில் இருந்து வருகின்றோம்.

இந்த இளம் தாயானவளின் மரணத்தில் வைத்தியசாலை நிர்வாகத்தில் எந்தவித பக்கச் சார்பற்ற நீதியான ஒரு விசாரணையின் மூலம் எதாவது பிழைகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டால் சட்டத்தின் முன் கொண்டு செல்லப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே வைத்தியசாலையின் அபிவிருத்திக் குழுpவின் நிலைப்பாடாகவும் இருக்கின்றது.

அரச நிர்வாகத்தில் விசாரணைக்கு என ஒரு படிமுறை உண்டு. வைத்தியசாலையை நோக்கும்போது தவறுகள் இடம்பெறுகின்றபோது முதலில் பணிப்பாளரின் ஆரம்ப விசாரணை இதைத் தொடர்ந்து பிராந்திய சுகாதாரப் பணிப்பாளரின் விசாரணை இதன்பின் மாகாண சுகாதார சேவைகள் மட்டத்திலான விசாரணை இதற்கு மேலாக மத்திய சுகாதார அமைச்சினால் போன்றவற்றினால் பல கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.

இதன் அடிப்படையில் தற்பொழது இங்கு நடைபெற்ற இளம் தாயின் மரணம் தொடர்பாக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.

ஆகவே இது தொடர்பாக முறையான விசாரணைகள் முடியும் வரை தேவையற்ற வதந்திகளை பரப்புவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று நாங்கள் கேட்டு நிற்கின்றோம்.

ஆகவே இது தொடர்பாக தேவையற்ற செய்திகளை பரப்புவதோ வைத்தியசாலையில் அடாத்தான முறையில் செயற்படுவதை தவிர்த்துக் கொள்ளும்படியும் நாம் வேண்டி நிற்கின்றோம்.

வைத்திய பணியானது ஒரு புனிதமான பணி. எந்த வைத்தியரும் ஒரு உயிரை காவுகொள்ள அனுமதிப்பதில்லை.

மறுபக்கத்தில் இவர்களின் கவனயீனத்தால் சம்பவம் இடம்பெறுவதும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறான செயற்பாடு கண்டறியப்பட்டால் நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்பது ஐயமில்லை.

ஆகவே வைத்திய சேவைகள் பொது மக்களின் நன்மைகள் முடக்குவதற்கான எந்தவித விஷமத்தனமாக , வேண்டப்படாத காரியங்களை செய்ய வேண்டாம் என்று நாம் கேட்டு நிற்கின்றோம்.

ஆகவே வைத்தியசாலை அபிவிருத்திக் குழு சார்பாக நாங்கள் தெரிவிப்பது இந்த வைத்தியசாலையில் இடம்பெறும் குறைபாடுகள் கருத்துக்கள் தெரிவிக்க வேண்டுமானால் வைத்தியசாலை பணிப்பாளரிடம் அலுவலக நேரத்தில் அல்லது அபிவிருத்திக் குழுவிடம் தெரிவித்து உங்கள் சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டது.