சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகர் நியமனம்.மக்கள் போராட்டம் தோல்வியில்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் புதிய வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் கோபாலமூர்த்தி ரஜீவ் இன்று (09) கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையை தீர்த்து வைத்தியசாலையின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்க வேண்டும் எனவும் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்ச்சுனாவிற்கு ஆதரவு வழங்கியும் நேற்று (08) பொதுமக்களால் பாரிய போராட்டம் முன்னெடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.