(கஜனா) அகிம்சை வழியில் போராடி இராஜதந்திர நுட்பங்களை கையாண்ட தலைவர் சம்பந்தன் ஐயா, ஒருபோதும் ஐயாவின் வெற்றிடத்தை இனி எவராலும் ஈடு செய்ய முடியாது எனவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடிஸ்வரன் தெரிவித்துள்ளார்.
மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சம்பந்தனின் அஞ்சலி நிகழ்வின்போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு தமிழரசுக்கட்சியின் காரைதீவு கிளை செயலாளர் கதிர்காமத்தம்பி செல்வபிரகாஷின் தலைமையில் காரைதீவில் நேற்று (07) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சம்பந்தன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவிந்திரன் கோடீஸ்வரன்,தமிழரசுக்கட்சியின் காரைதீவுக்கிளை உதவிசெயலாளர், கட்சி ஆதரவாளர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.