எருவில் கிராமத்தில் சஜித்தின் பிரபஞ்சப் படைப்பு.

(எருவில்  துசி)  எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தில் அதிபர் சி. தீபதர்ஷன் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களின் பங்களிப்பில் அவ பிரபஞ்சம் திட்டத்தின் கீழ் ஸ்மார்ட் கிளாஸ் திறந்து வைக்கின்ற நிகழ்வு (04)

இலங்கையில் உள்ள பாடசாலைகளில் மாணவர்கள் கற்பதற்கு ஏற்ற வகையிலே (IT)   நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற வகையில் மாணவர்கள் கல்வியை கற்றுக் கொள்ளும் நோக்குடன் நவீன தொழில்நுட்ப வசதிகளிடம் கூடிய விசேடமாக வடிவமைக்கப்பட்ட வகுப்பறை ஒன்று நாடலவிய ரீதியில் உள்ள பாடசாலைகளில் எதிர்க்கட்சித் தலைவரினால் திறந்து வைக்கப்படுகிறது .

அந்த அடிப்படையில் மட் /பட் /எருவில் கண்ணகி மகா வித்தியாலயத்தின் பாடசாலைக்கும் ஒரு நவீன தொழில்நுட்ப வசதிகளும் கூடிய வகுப்பறை ஒன்று திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வினை பட்டிருப்புத் தொகுதி ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி அவர்கள் ஒழுங்கமைத்து இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.