சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட கொண்டாட்ட நிகழ்வுகள் ஆரம்பம்.

சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட நிகழ்வை முன்னிட்டு விசேட இலச்சினை அறிமுக விழாவும் ஹஜ் பெருநாள் கொண்டாட்ட நிகழ்வும் நேற்று (03) இரவு புதன்கிழமை சாய்ந்தமருது சமுர்த்தி வங்கிச் சங்க கூட்ட மண்டபத்தில் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.எம். அபூபக்கர் பிரதம அதிதியாக கலந்து சிலோன் மீடியா போரத்தின் விசேட இலச்சினையினை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிகழ்வுக்கு விசேட அதிதியாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆசிக், கௌரவ அதிதிகளாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில உதவி செயலாளர் எஸ்.ஏ.எம்.இப்றாகிம் மக்கி, சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம்.கே.சாகுல் ஹமீத், திருநெல்வேலி அலி சன்ஸ் நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.நெய்னார் முஹம்மட் கடாபி, ஏ.பி.எஸ். ஸ்மார்ட் லங்கா பிரைவேட் லிமிடெட் முகாமைத்துவப் பணிப்பாளர் ஏ.ஏ.அஷ்ரஃப் அலி, சமாதான ஊடக அமைப்பின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.எம்.ஜெஸ்மின், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் சாதிக் ஷிஹான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் இதில் ஐவா கெம்பஸ் தவிசாளர் கலாநிதி எம்.எம்.முனாசிக், சாய்ந்தமருது – மாளிகைக்காடு வர்த்தக சங்கத்தின் முன்னாள் செயலாளர் தொழிலதிபர் இக்ரா ஜலால், சிலோன் ஜேனலிஸ்ட் போரத்தின் செயலாளர் எஸ். அஷ்ரஃப் கான், நுஜா ஊடக அமைப்பின் உறுப்பினர் பீ.எம்.றியாத், சிலோன் மீடியா போரத்தின் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித், பொருளாளர் நூருல் ஹுதா உமர் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சிலோன் மீடியா போரம் கடந்த ஐந்து வருடங்களில் ஆற்றிய பணிகள் பற்றிய விஷேட உரையினை போரத்தின் பொருளாளரும், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினருமான நூருல் ஹுதா உமர் நிகழ்த்தினார். இதன்போது கேக் வடிவில் தயாரிக்கப் பட்ட சிலோன் மீடியா போரத்தின் ஐந்து வருட பூர்த்தி கொண்டாட்ட விசேட இலச்சினையினை சிலோன் மீடியா போரத்தினரால் வெட்டி பகிர்ந்தளிக்கப்பட்டது.

மேலும் நிகழ்வின் பிரதம அதிதி இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.எம். அபூபக்கரினால் சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ. மஜீத் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார்.நிகழ்வில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.எம்.எம். அபூபக்கர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாட்டு மாநில உதவி செயலாளர் எஸ்.ஏ.எம். இப்ராஹிம் மக்கி, சிரேஷ்ட ஊடகவியலாளர் திருச்சி எம். கே .சாகுல் ஹமீத், திருநெல்வேலி அலி சன்ஸ் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.நெய்னார் முஹம்மட் கடாபி உள்ளிட்டோர் சிலோன் மீடியா போரத்தின் உறுப்பினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதன்போது சிலோன் மீடியா போரம்   கடந்து வந்த பாதை எனும் தலைப்பில் குறுந்திரைப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.