50 நாட்களில் பொத்துவிலை அடைந்த பாதயாத்திரீகர்கள்!   நாளை மறுநாள் உகந்தைமலையை அடைவர்.

( வி.ரி. சகாதேவராஜா)  யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச்சந்நதி –  கதிர்காமம்  பாதயாத்திரை குழுவினர் 50 ஆவது நாளில் பொத்துவிலை அடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணம் செல்வச் சந்நதி ஆலயத்திலிருந்து கடந்த மே மாதம் 11 தேதி புறப்பட்ட ஜெயாவேல்சாமி தலைமையிலான கதிர்காம பாதயாத்திரை குழுவினர் கடந்த 50நாட்களாக யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய ஐந்து மாவட்டங்களைக் கடந்து கடந்த (15)ம் தேதி  சனிக்கிழமை ஆறாவது மாவட்டமான அம்பாறை மாவட்டத்திற்குள் பிரவேசித்தார்கள்.
இன்று பொத்துவிலை அடைந்த குழுவினர் நாளை பாணமையை அடைந்து சன்னியாசி மலையில் தங்குவர்.
நாளை மறுநாள் 27 ஆம் தேதி வியாழக்கிழமை உகந்தை மலையை அடைய இருக்கின்றார்கள். 30ஆம் தேதி காட்டுப்பாதை திறக்கப்பட்டதும் முதல் நாள் காட்டுக்குள் பிரவேசிக்க இருக்கின்றார்கள்.