மன்னாரில் பொசென் பௌர்னமி விழா

( வாஸ் கூஞ்ஞ)

பௌத்த மக்களால் கொண்டாடப்படும் பொசென் பௌர்னமி விழா இலங்கையில் பல பாகங்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்ட பொழுதும் மன்னாரிலும் இந் நிகழ்வு இடம்பெற்றது.

மன்னாரில் இந்த நிகழ்வானது தள்ளாhடி 54 வது காலாட் படை பிரிவின் ஏற்பாட்டில் இலங்கை இராணுவதத்pனர் , கடற்படை மற்றும் பொலிசார் யாவரும் ஒன்றிணைந்து இந்த நிகழ்வை தள்ளாடி பகுதியில் அலங்கார பந்தல்களை வடிவமைத்து வெகு சிறப்பாக கொண்டாடினர்.

இந் நிகழ்வுக்கு நான்கு சமயத் தலைவர்கள் குறிப்பாக மன்னார் ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை , பல அமைப்புக்களின் பிரதிநிதிகள் , மன்னார் முன்னாள் அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மெல் உட்பட பெரும் தொகையான மக்கள் இன மத வேறுபாடுகளை மறந்து இதில் கலந்து கொண்டனர்.

பொசென் பதி கீ சரணிய என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற மேடை நிகழ்வுகளில் இராணுவ . மன்.பள்ளிமுனை , அடம்பன் மற்றும் முருங்கன் கல்லூரி மாணவ மாணவிகளால் இசைக்கப்பட்ட பக்தி கீதங்களும் மேடையேற்றப்பட்டன.