180மாணவர்கள் பங்கேற்புடன் மைதானத்தில் யோகா செயல்முறை

சர்வதேச யோகா தினத்தினைச் சிறப்பித்து இராமகிருஸ்ணமிசன் விவேகானந்த மனிதவள மேம்பாட்டு நிலையத்தின் ஏற்பாட்டில் யோகா செயல்முறை காட்சி இன்று(21) வெள்ளிக்கிழமை காலை சிவானந்தா விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.

180மாணவர்கள் பங்கேற்புடன் இச்செயல்முறை காட்சிப்படுத்தப்பட்டது. ஸ்ரீமத் சுவாமி நீலமாதவானந்தர் ஆசியுரையுடன் நடைபெற்ற இந்;நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர்.முரளீஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.