கொக்கட்டிச்சோலையில் ஏராளமானோர் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைவு.

(வி.ரி. சகாதேவராஜா)  ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் கொக்கட்டிச்சோலை  பிரதேசத்திலிருந்து ஏராளமானோர் அங்கத்துவம் பெற்று இணைந்து கொண்டார்கள் .
ஐக்கிய மக்கள் சக்தியின் கொக்கட்டிச்சோலை பட்டிப்பளை பிராந்திய உதவி இணைப்பாளரும் முன்னாள் தவிசாளரும் அதிபருமான சிவ. அகிலேஸ்வரன்  ஏற்பாட்டில் அவர் முன்னிலையில் புதிய அங்கத்தினர்களை சேர்க்கும் நிகழ்வு இடம் பெற்றது.
 ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் 20 லட்சம் புதிய அங்கத்துவர்களை சேர்க்கும் தேசிய வேலைத்திட்டத்தில் ஓரங்கமாக இந்த நிகழ்வு முதலைக்குடாவில் இடம் பெற்றது.
 இந்த நிகழ்வில் மாவட்ட பிரச்சார செயலாளர் வெ.சுதாகரன் , ஊடக செயலாளர் நா.பூவண்ணன், இளைஞர் அணி தலைவர் த.சுதர்சன், நிருவாக செயலாளர் ஜோன் கென்னத் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த நிகழ்வில் பெருந்திரளான ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.