தமிழ்ப்பொது வேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்.

நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித்  தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும் நடாத்தி வருகின்றது.

அதன் தொடர்ச்சியாக 14.06.2024 அன்று வெள்ளிக்கிழமை மாலை கொடிகாமம் வர்த்தக சங்கத்தினருடனான கலந்துரையாடல் இடம்பெற்றது. 18.06.2024 அன்று காலை சங்கானை கூட்டுறவுச்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இடம்பெற்றது.

ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டியதன் அவசியம் பற்றியும் தமிழ் மக்கள் ஒன்றுசேர தவறும்பட்சத்தில் தமிழ்மக்களின் வாக்குகளும் பலமும் சிதறும் ஆபத்துக்கள் பற்றியும் தமிழ் மக்கள் பொதுச்சபையின் சார்பாக கலந்துகொண்டோர் விளக்கமளித்தனர். அத்துடன் கலந்துகொண்டவர்களோடு கேள்வி பதில் உரையாடல்களும் இடம்பெற்றன. தொடர்ந்துவரும் நாட்களில் தங்களின் பங்களிப்பும் இருக்கும் என கலந்துகொள்ளும் மக்கள் அமைப்புகளின் அங்கத்தவர்கள் நம்பிக்கை வெளியிட்டுவருகின்றனர்.