உகந்தையில் சிவாச்சாரிய அபிஷேக   குரு பட்டாபிஷேகம்.

( வி.ரி. சகாதேவராஜா)  வரலாற்று பிரசித்தி பெற்ற  உகந்தை மலை  முருகன் ஆலயத்தில் வரலாற்றில் முதல் முறையாக சிவாச்சார்ய அபிஷேக குரு பட்டாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது .
முதல் குருபட்டாபிஷேகம் ஆலயத்தின் உதவிக்குரு கு.சீ.கோவர்த்தன சர்மாவிற்கு நடைபெற்றது.
முத்து ஆலயத்தின் உதவிக்குரு கோபி நாத சர்மா  ஐயாவிற்கு  குரு பட்டாபிஷேகம்  நடைபெற்றது.
உகந்த மலை முருகன் ஆலய பிரதம குரு சிவ ஸ்ரீ க. கு .சீதாராம் குருக்கள் பட்டாபிஷேத்தை நடாத்தி வைத்தார்.
இதுவரை இவர்கள் இருவருக்கும் வழங்கப்பட்டு வந்த சர்மா என்ற நாமம் இனி குருக்கள் என அழைக்கப்படும்.
உகந்தை முருகனின் அருளும், ஆசீர்வாதமும் கிடைக்க சூழ இருந்தவர்கள் வாழ்த்தினார்கள்.