ஆலையடிவேம்பு புதிய பிரதேச செயலாளர்  திரவியராஜ்ஜுக்கு கௌரவம்.

(வி.ரி.சகாதேவராஜா)   ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக இலங்கை நிர்வாக சேவை முதலாந்தர அதிகாரி இராசரத்தினம் திரவியராஜ் நியமிக்கப்பட்டதையடுத்து பல அமைப்புகளும் ஆர்வலர்களும் வாழ்த்து தெரிவித்து கௌரவித்து வருகின்றனர்..
அந்த வகையில் காரைதீவிலிருந்து நேற்று ஆலையடிவேம்பு பிரதேச செயலகத்திற்குச்  சென்ற காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில், உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா , சமுக செயற்பாட்டாளர் வினாயகம் விமலநாதன் ஆகியோர் புதிதாக பதவியேற்ற திரவியராஜுக்கு பொன்னாடை போர்த்தி மலர் மாலை அணிவித்து கௌரவித்தனர்.
திரு. திரவியராஜ் முன்னதாக
வெல்லாவெளி நிந்தவூர் அம்பாறை போன்ற பிரதேசங்களில் கடமையாற்றி பொத்துவில் பிரதேச செயலாளராக சிலகாலம் அருஞ்சேவையாற்றி இருந்தார் .
அதன் பின்னர் ஆட் பதிவு திணைக்கள பிரதி ஆணையாளராக கிழக்கில் பணியாற்றி வந்த வேளையில், தற்போது ஆலையடிவேம்பு பிரதேச செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறந்த முற்போக்கு சிந்தனையுடன் சிறந்த சமுகசேவையுமாற்றி வந்த மண்ணின் மைந்தனான அவரை ஆலையடிவேம்பு சமூகம் மற்றும் அம்பாறை மாவட்ட சமூக செயற்பாட்டாளர்கள் பெரிதும் வரவேற்றுள்ளனர்.