காரைதீவில் தேசிய சுற்றுச்சூழல் பாரிய சிரமதானம்.

( வி.ரி.சகாதேவராஜா)  தேசிய சுற்றுச்சூழல் வாரத்தினை முன்னிட்டு காரைதீவில் பாரிய சிரமதானம் பிரதேச செயலாளர் சிவ ஜெகராஜன் தலைமையில் நடைபெற்றது.
ஜுன் 03 சுற்றாடல் தூய்மைப்படுத்தல் தினம் என்பதற்கமைய காரைதீவு  பிரதேச செயலகம் மற்றும்  பிரதேச சபை, காரைதீவு சுகாதார வைத்திய அலுவலகத்தினர், காரைதீவு பொலீஸ் நிலையம்  மற்றும் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்போடு  இச் சிரமதானம் மேற்கொள்ளப் பட்டது.
 காரைதீவு-02,03,05ம் பிரிவுகளின் தோணாவின் சூழலினை தூய்மையாக்கல் மற்றும் காரைதீவு-09 வெட்டு வாய்க்கால் முகத்துவாரப்பகுதியில் முறைகேடாக குப்பைகூழங்கள் கொட்டப்பட்டு மிகவும் மோசமான முறையில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு காணப்படும் இடத்தினை தூய்மையாக்கல் சிறந்த முறையில் இடம் பெற்றது.
இதன் போது பிரதேச சபை ஆளணியினர் மற்றும் வாகன வசதிகள் வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.