மாற்றுப் பயிர் விவசாயிகளுக்கு பணிப்பாளர் திருமதி சகிலா பாணு ஆலோசனை.

( வாஸ் கூஞ்ஞ) மன்னார் மாவட்டத்தில் வயல் நிலங்களில் மாற்று நாற்று பயிர் செய்த விவசாயிகள் மன்னார் பகுதியில் மழை பெய்து வருவதால் வயலில் தேங்கி வரும் நீரை உடனடியாக வெளியேற்றுவதற்கான செயல்பாட்டில் விவசாயிகள்  ஈடுபட வேண்டும் என மன்னார் மாவட்ட விவசாயப் பணிப்பாளர் திருமதி சகிலா பாணு மன்னார் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

மன்னார் மாவட்டத்தில் தற்பொழுது நெற் செய்கைக்கு மாற்றீடு பயிராக மன்னார் விவசாயிகள் வயல்களில்  பயிறு மற்றும் கடலை விதை;துள்ளனர்.

தற்பொழுது மன்னாரில் கடும் மழை பெய்து வருகின்றமையால் வயல்களில் செய்கை பண்ணப்பட்டிருக்கும் கடலை மற்றும் பயறு ஆகியவற்றிற்கு பாதிப்பு ஏற்படாது இருப்பதற்கு சம்பச்தப்பட்ட விவசாயிகள் உடனடியாக வயலில் தேங்கியிருக்கும் நீரை வெளியேற்றுவதற்கான ஆலோசனை மன்னார் விவசாயிகளுக்கு மன்னார் விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பாணு அவர்களால் வழங்கப்பட்டுள்ளது.

இப்பயிர் செய்கை தற்பொழுது மன்னார் மாவட்டத்தில் பரவலாக 5000 ஏக்கர் நிலத்தில் இப்பயிர் செய்கை செய்யப்பட்டிருப்பதாகவும் அரசாங்கத்தின் உதவியுடன் 1500 ஏக்கர் செய்கைப் பண்ணப்பட்டிருப்தாகவும்  மன்னார் மாவட்ட விவசாய பணிப்பாளர் திருமதி சகிலா பாணு இவ்வாறு மேலும் தெரிவித்தார்.