தாந்தாமலை மலைப் பிள்ளையாருக்கு மகா கும்பாபிஷேகம்.

(  வி.ரி.சகாதேவராஜா)   கிழக்கிலங்கையில் வரலாற்று பிரசித்தி பெற்ற  மட்டக்களப்பு  மண்முனை தென்மேற்கு  தாந்தாமலை ஸ்ரீ முருகன் ஆலய மலைப்பிள்ளையாருக்கான மகா கும்பாபிசேகம் இன்று 03.06.2024ஆம் திகதி திங்கட்கிழமை அரோகரா கோஷம் விண்ணைப் பிளக்க சிறப்பாக நடந்தேறியுள்ளது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
தான்தோன்றிஈஸ்வரர் ஆலய பிரதம குருவும் தாந்தாமலை முருகன் ஆலய பிரதம குருவுமான சிவசிறி மு.கு.சச்சிதானந்தக்குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் கிரியைகளில் ஈடுபட்டனர். சரியாக 11.18 மணியளவில் பிரதான கும்பம் சொரியப்பட்டது. தொடர்ந்து ஏனைய பரிவார மூர்த்திகளுக்கான கும்பங்கள் சொரியப்பட்டன.
ஆலய பரிபாலன சபை தலைவர் மு.அருணன் தலைமையிலான பரிபாலன சபையினர் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.
இதனை முன்னிட்டு கடந்த 01,02.06.2024ஆம் திகதி ஆகிய இரு நாட்கள் எண்ணெய்க் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்றது. பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
குறித்த காலங்களில் விசேட பொதுப்போக்குவரத்துச் சேவைகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
மேலும் அடியார்களுக்கு ஆலய அன்னதான சபையினரால் அன்னதான ஒழுங்கும் மேற்கொள்ளப்பட்டிருந்தது.