சக்தி மகளிர் இல்ல வெள்ளி விழா.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)   களுவாஞ்சிகுடி சக்தி மகளிர் இல்ல வெள்ளி விழா  சக்தி மகளிர் இல்ல பணிப்பாளர்  தம்பிப்பிள்ளை உதயதாஸ் தலைமையில் சக்தி இல்ல வளாகத்தில்  இடம் பெற்றது.

இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.சக்தி மகளிர் இல்லமானது  மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி  பங்காரு அடிகளாரின் ஆசியுடன்
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிள்ளைகள், ஆதறவற்ற சிறார்களுக்கு கல்வி, உணவு, உறைவிடம் மற்றும் ஆன்மீக கல்வியுடன் ஒழுக்கத்தையும் பராமரித்துவருகின்றது.இவ் இல்லத்தில் கல்வி கற்ற மாணவிகள் பலர் பல்கலைக்கழகம் சென்று உயர் பதவிகளில் காணப்படுவதுடன் தொழில் அதிபர்களாக உள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதன் போது இல்லத்தில்  கல்வி கற்று சிறந்த பெறுபேறுகளை பெற்று பல்கலைக் கழகத்திற்கு தெரிவான மாணவிகளுக்கும்  மாகாண மட்ட மற்றும் தேசிய ரீதியில் திறமையை வெளிக்காட்டிய மாணவிகளுக்கு  நினைவுச் சின்னங்கள் அதிதிகளினால் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் மாவட்ட அரசங்க அதிபருக்கு சக்தி இல்ல பணிப்பாளரினால் நினைவுச்சின்னம்  வழங்கி கெளரவம் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந் நிகழ்வில் உயர் அதிகாரிகள், பிரமுகர்கள், சக்தி இல்ல உத்தியோகத்தர்கள், பழைய மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.