மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் தொடர்பான கலந்தாய்வு.

(ஹஸ்பர் ஏ.எச்)   திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் மற்றும் பிரதேச மட்ட சுய உதவி குழு தொடர்பான கலந்துரையாடல் இடம் பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெ.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் (21) பிரதேச செயலக மண்டபத்தில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் சேருவில பகுதியில் இயங்கி வரும்” சகனசெவன” அமைப்பின் மாற்றுத் திறனாளிகளின் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டினர். பிரதேச மட்டத்தில் சுய உதவி குழு அமைப்பின் மூலமாக தங்களது மாற்றுத் திறனாளி அமைப்புக்களை எதிர்காலத்தில் திறம்பட வலுவூட்டுவதன் மூலம் அவர்களது செயற்பாடுகளை அதிகரிப்பது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
 இதில் மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன்,தம்பலகாமம் பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தம்பலகாமம் பிரதேசத்தில் உள்ள மருதம் மாற்றுத் திறனாளி சங்கத்தினர் உட்பட பெற்றார் ,பாதுகாவலர் என பலர் கலந்து கொண்டனர்.