மதுபானசாலைகளுக்கு பூட்டு.

வெசாக் மற்றும் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .

இதன்படி, வெசாக் மற்றும் பௌர்ணமி தினமான 23 முதல் 24 வரையான திகதிகளில் இந்த மதுபானசாலைகள் மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இதேவேளை , எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் மாத்தளை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச அனுமதிப் பத்திரம் பெற்ற மதுபானசாலைகளை மூடுவதற்கு இலங்கை கலால் திணைக்களம் தீர்மானித்துள்ளது .