ஓட்டமாவடியில் தடைசெய்யப்பட்ட சிகரட்டுக்கள்

(கனகராசா சரவணன்))

ஓட்டமாவடி ஹோட்டல் ஒன்றின் கூரையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான 800 சிகரட்டுகளுடன்  ஹோட்டல் முதலாளியை நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு விசேட அதிரடிப்படையினர் கைது செய்து ஒப்படைத்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து விசேட அதிரடிப்படைத் தளபதி சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தரவின் ஆலோசனைக்கமைய மட்டு அம்பாறை வலய பொலிஸ் அத்தியட்சகர் குணசிறி மற்றும் உதவி பொலிஸ் அத்தியட்சகர்  சம்பத்குமார ஆகியோரின் வழிகாட்டலில்;

கல்லடி அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கா தலைமையில விசேட அதிரடிப்படையை கொண்ட  குழுவினர் சம்பவதினமான  நேற்று இரவு 9.00 மணியளவில் ஓட்டுமாவடி பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றினை சுற்றிவளைத்து சோதனையிட்டனர்.

இதன் போது ஹோட்டலின் கூரையின் மேல் மறைத்து வைக்கப்பட்டிருந்த சட்டவிரோத 800 சிகரட்டுக்களை மீட்டதுடன முதலாளியை  கைது செய்தனர்  

இதில் கைது செய்யப்பட்டவரையும் சான்று பொருளான சிகரட்டுக்களையும் விசேட அதிரடிப்படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளாக பொலிசார் தெரிவித்தனர்