விஞ்ஞான இரண்டு கேள்விகளுக்கு இலவச புள்ளிகள்.

முறைப்பாடு கிடைக்கப்பெற்ற கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையின் விஞ்ஞான வினாத்தாளின் இரண்டு கேள்விகளுக்கு இலவச புள்ளிகளை வழங்க பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
விஞ்ஞான வினாத்தாளின் 09 மற்றும் 39 ஆகிய வினாக்களுக்கு இலவச புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.