சந்நதி – கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் மூன்று நாட்களில் பளையில்! பெரு வரவேற்பு!

(வி.ரி.சகாதேவராஜா)    சந்நதி கதிர்காமம் பாதயாத்திரை குழுவினர் மூன்று நாட்களில் பளையை சென்றடைந்தனர். அங்கு அவர்களுக்கு அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கடந்த சனிக்கிழமை (11)  இலங்கையின் மிக நீண்ட பாதயாத்திரை யாழ்ப்பாணம் தொண்டமானாறு செல்வச் சந்நிதி ஆலயத்திலிருந்து ஆரம்பமானது தெரிந்ததே.
இன்று (14) செவ்வாய்க்கிழமை நான்காவது நாள் குழுவினர் இயக்கச்சி சென்று  ஆனையிறவு பாலத்தினூடாக உமையாள்புரத்தைச் சென்றடைந்தனர்.
இதேவேளை நேற்று  மூன்றாவது நாள். அன்று துர்காபுரம் துர்க்கை அம்மன் ஆலயத்திலிருந்து பளை அம்மன் கோவிலை சென்றடைந்து
தொடர்ந்து பாதயாத்திரை குழுவினர் மீண்டும் பளை நரசிம்ம வைரவர் ஆலயத்தை சென்றடைந்தனர்.
பளை நரசிம்ம வைரவர் ஆலயத்தில் பலத்த வரவேற்பைப் பெற்றது. அங்கு ஓம் ரீவீ நிறுவனத்தினர் பாதயாத்திரீகர்களுக்கு பொதிகளை வழங்கினர்.