மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க விஜயம்!!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்)  மட்டக்களப்பிற்கு அனுராதபுர மாணவர்கள் நல்லிணக்க கள விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர்.

தேசிய நல்லிணக்க மன்றத்தின் தலைவர் கலாநிதி பிரசாத் ஆர் ஹெரத்தினின் வழிகாட்டுதலின் கீழ் தேசிய நல்லிணக்க மன்றத்தின் ஊடக பேச்சாளர் சுமேதவராவேவ தலைமையில்  களுவாஞ்சிகுடி ஏ பிளஸ் கல்லூரியில் (12) திகதி இடம் பெற்றது.

அகில இலங்கை ரீதியாக இன, மத வேறுபாடு இன்றி சகோதரத்துவத்தை முன்னிறுத்தி மாணவர்களிடையே நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக இவ் கலவிஜயம் இடம் பெற்று வருகின்றது.

சிங்கள பாரம்பரிய முறைப்படி வெற்றிலை கொடுத்து வரவேற்று மங்கள விளக்கு ஏற்றப்பட்டு இறைவணக்கத்துடன்  இந் நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது.

அனுராதபுரத்தை சேர்த்த மாணவ மாணவிகள்  தேசிய நல்லிணக்கத்தை மேம்படுத்தும் முகமாக களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு வருகை மேற்கொண்டு இப்பிரதேச மாணவர்களுடன் கலந்துரையாடி நற்புறவை ஏற்படுத்திக் கொண்டமை சிறப்பம்சமாகும்.

இதன் போது மாணவ மாணவிகளின் கண்கவர் நடனங்கள் அரங்கேற்றப்பட்டது.

இந் நிகழ்வினை தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கினைப்பாளர் திருமதி பிரேமிலா  கோபிநாத், ஆசிரியர் நேஷாந் பணான்டோ ஆகியோரின் ஏற்பாட்டில் இவ் நிகழ்வு இடம் பெற்றது.

இதன் போது மட்டக்களப்பை சேர்ந்தவர்களை அனுதாதபுரத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு இதன் போது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களினால் அழைப்பு விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை மேம்படுத்துவதற்கும் மாணவர்களிடையே  நல்லுறவை மேம்படுத்தும் முகமாக இப் பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை சிறப்பம்சமாகும்.

எதிர்காலத்திலும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முகமாக நாடு பூராகவும் கள விஜயம் மேற்கொள்ளப்படவுள்ள்மை  குறிப்பிடத்தக்கது.