முள்ளிவாய்க்கால் நினைவேந்தலாக கஞ்சி பரிமாரல்.

( வாஸ் கூஞ்ஞ) வடக்கு மாகாணத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வடக்கு கிழக்கு மக்கள் 12.05.2024 தொடக்கம் 18.05.2024 வரை ஒரு வாரத்துக்கு நினைவேந்தல் செய்வதற்கான செயல்பாட்டில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இவ் நினைவேந்தலின் ஆரம்பமாக மன்னாரில்  சனிக்கிழமை (11) காலையில் வடக்கு கிழக்கு பகுதிகளிலுள்ள வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கமானது மன்னார் பள்ளிமுனை பெருக்க மரத்துக்கு அருகாமையில் சிரட்டையில் கஞ்சி வழங்கும் நினைவேந்தலை ஆரம்பித்து வைத்துள்ளனர்.

இவ் நிகழ்வில் கஞ்சி காய்ச்சி கூடியிருந்தவர்கள் மற்றும் வீதியில் சென்று வந்தோருக்கு பரிமாரி அருந்திச் சென்றததையும் நோக்கக்கூடியதாக இருந்தது.