‘உள்ளச் சிதறல்கள்’ நூல் வெளியீட்டு விழா.

( வாஸ் கூஞ்ஞ)  பேசாலை எழுத்தாளர் திரு ஐ.மதிவளனின் ஆக்கத்தில் உருவாக்கப்பட்ட ‘உள்ளச் சிதறல்கள்’ எனும்  கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா பேசாலையில் நடைபெற்றது.

பேசாலை ஜோண் மேரி ஹோட்டலில் சனிக்கிழமை (11) காலை 9.30 மணியளவில் பேசாலை வளர்கலை மன்றத்தின் அனுசரனையுடன் இம்மன்றத் தலைவர் இ.கெனிசியஸ் லியோன் தலைமையில் நடைபெற்றபோது

இதில் பிரதம விருந்தினராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் கலந்து கொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக்  அருட்பணி ஜே.டெனிஸ் குரூஸ் அடிகளார் , சட்டத்தத்தரணிகள் அன்ரனி மடுத்தீன் , பிறிமுஸ் சிராய்வா மன்னார் மாவட்ட தேனி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட இணையத் தலைவர் ஏ.றொபட் உட்பட பலர் இதில் கலந்துகொணட்னர்.

எழுத்தாளர் மதிவளனின் கன்னி முயற்சியாக உருவாக்கப்பட்ட ‘உள்ளச் சிதறல்கள்’ எனும்  கவிதைத் தொகுப்பு நூலை பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் முதல் வெளியீட்டை ஆரம்பித்து வைத்தார்.