காரைதீவில்  திடீர் சோதனை.

( வி.ரி. சகாதேவராஜா)    காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள உணவகங்கள்,பேக்கரிகள்,உணவு தொழில்சாலைகள்,பல் பொருள் அங்காடிகள் மற்றும் நடமாடும் பழம்,மரக்கறி விற்பனை நிலையங்கள் போன்றன (9) வியாழக்கிழமை விஷேட பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
 இதன் போது நிறுவன உரிமையாளர்களுக்கு சுகாதார ஆலோசனையும் மேற்கொள்ளப்பட்டது.
 காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் தஸ்லிமா பஷீர் உள்ளிட்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் உணவு சுகாதார பிரிவுக்கு பொறுப்பான அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.