இன்று மல்வத்தை பிராந்திய கணித விஞ்ஞான உயர்தர மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் உதவி.

( வி.ரி. சகாதேவராஜா)  மல்வத்தை பிராந்திய உயர்தர கணித விஞ்ஞான  மாணவர்களின் மேலதிக கற்றலுக்கான இரு வருட உதவியை
அவுஸ்திரேலியா இணைந்த கரங்கள் அமைப்பு  வழங்க முன்வந்துள்ளது .
“Aim to excellent out come” என்று இவ் வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் மல்வத்தை விபுலானந்த தேசிய பாடசாலையின் அதிபர் திருமதி கௌசல்யா கணேஸ்வரன் தலைமையில் நேற்று(3) வெள்ளிக்கிழமை நடைபெற்றது .
பிரதம அதிதியாக சம்மாந்துறை வலய உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா  கலந்து சிறப்பித்தார்.
 கௌரவ அதிதியாக இணைந்த கரங்கள் அமைப்பின் இணைப்பாளர் ஏ. காந்தன் கலந்து சிறப்பித்தார் . மேலும் கணித பாட உதவிக் கல்விப் பணிப்பாளர் எம் எம் எம். ஜௌபர் ஆசிரிய ஆலோசகர் ஹபீப் மற்றும் மேலதிக வகுப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.
மல்வத்தை வீரமுனை பிராந்தியத்தில் கணித விஞ்ஞான பாடத்தை கற்கும் 12 மாணவர்களுக்கான இரு வருட பிரத்தியேகமான விசேட வகுப்புகள் நடாத்த நிதிஉதவி அங்கு வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த மாணவர்களும் பெற்றோர்களும் ஆசிரியர்களும் இந்த வைபவத்தில் கலந்து கொண்டனர்.