மண்டானையில் சித்திரைப் புத்தாண்டு.

( வி.ரி. சகாதேவராஜா)   விநாயகபுரம் சமுர்த்தி வங்கியின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வானது கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கோவில் ~4 மண்டானை பாடசாலை  விளையாட்டு மைதானத்தில் சிறப்பாக நடைபெற்றது.
விநாயகபுரம் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சசிகுமார்  ஏற்பாட்டில் நடைபெற்ற
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளர் .தங்கையா கஜேந்திரன் மற்றும் சமுர்த்தி  தலைமைபீட முகாமையாளர் எம்.அரசரெத்தினம் முகாமைத்துவ பணிப்பாளர் பி.கமலேஷ்வரன் தம்பிலுவில் சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.சதீஸ்  உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் பாரம்பரிய கலாசார விளையாட்டுகளுடன் கயிறிழுத்தல் போட்டி அனைவரையும் பரவசப்படுத்தியது.
மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ,வலய வங்கி உதவி முகாமையாளர்கள்,வங்கி வலய கள உத்தியோகத்தர்கள்,திட்ட உதவியாளர்,சமூர்த்தி தலைமை காரியாலய ச.அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச மட்ட ,வங்கி க.பா.சபைத் தலைவர்கள்,வர்த்தக.ச.தலைவர் உறுப்பினர்கள்,சமூர்த்தி உற்பத்தியாளர்கள்,ச.வங்கி வாடிக்கையாளர்கள்  பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.