பழுகாமத்தில்  மாபெரும் கலாசார விளையாட்டு விழா.

மட்டக்களப்பு போரதீவுப்பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் நடாத்திய புத்தாண்டு மாபெரும் கலாசார விளையாட்டு விழா நிகழ்வு 2024.04.27 ஆம் திகதி பழுகாமம் கண்டுமணி மகா வித்தியாலய விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் மு.குகதாசன் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா யுலேக்கா முரளிதரன் அவர்கள் கலந்து கொண்டதுடன், போரதீவுப்பற்று  பிரதேச செயலாளர் சோ.ரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சமநிலை ஓட்டம், சாக்கு ஓட்டம், முட்டி உடைத்தல், வழுக்கு மரம் ஏறுதல், சிறுவர்களுக்கான மிட்டாய் ஓட்டம், பலூன் உடைத்தல், தேங்காய் துருவுதல், கயிறு இழுத்தல், துவிச்சக்கர வண்டி ஓட்டம், தோணி ஓட்டம், மரதன் ஓட்டம் போன்ற பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற்றதுடன் போட்டி நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
ஆர்.திலக்ஸ்.