திருகோணமலை கோட்டக் கல்விப்பணிப்பாளராக சண்முகநாயகம் நியமனம்!

( வி.ரி.சகாதேவராஜா)   திருகோணமலை வலயத்தின் திருகோணமலை கோட்டக்கல்வி பணிப்பாளராக செந்தில்வடிவேல் சண்முகநாயகம் நியமிக்கப்பட்டுள்ளார்.
 திருகோணமலை இந்து கல்லூரியில் பிரதி அதிபராக இருந்த இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தரத்தைச் சேர்ந்த  சண்முகநாயகம் நேற்று முன்தினம் முதல்  கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.
 திருகோணமலை
வலயக்கல்விப் பணிப்பாளர் தினகரன் ரவி அவருக்கான நியமனக்கடிதத்தை கையளித்தார் .
36 வருட கல்வி சேவை அனுபவத்தைக் கொண்ட சண்முகநாயகம் திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரி மற்றும் திருகோணமலை இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில்  நீண்ட கால சேவையை ஆற்றியவராவார்.
எதிர்வரும் 2025 மார்ச் மாதத்தில் ஓய்வு பெறும் அவர் மட்டக்களப்பு அரசினர் ஆசிரியர் கலாசாலையின் 1991/92 விஞ்ஞானத்துறையில் பயிற்சி பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.