அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 7.439.000 ரூபா ஒதுக்கீட்டில் மாணவர்கள் தங்குமிடம்.

(வி.சுகிர்தகுமார்)    அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் 7.439.000 ரூபா ஒதுக்கீட்டில் நிர்மானிக்கப்படவுள்ள மாணவர்கள் தங்குமிட கட்டடத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  (24) இடம்பெற்றது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் உணவுப்பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார துரித முயற்சி திட்டத்தின் கீழ் சிறுவர் நன்நடத்தை திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட நிதியின் மூலம் ஆரம்பிக்கப்பட்டுள்ள முதலாம் கட்ட வேலைக்கான அடிக்கல்லே இவ்வாறு நடைபெற்றது.
விபுலானந்தா சிறுவர் இல்லத்தின் ஸ்தாபகர் இறைபணிச்செம்மல் த.கயிலாயபிள்ளை தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் தகஜேந்திரன் மற்றும் அம்பாரை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் த.கலையரசனின் இணைப்பு செயலாளர் க.கண்ணதாசன் மாவட்ட சிறுவர் நன்நடத்தை அதிகாரி எஸ்.சிவகுமார் அக்கரைப்பற்று பிரதேச சிறுவர் நன்நடத்தை அதிகாரி ஜெயதாஸ் உள்ளிட்ட இந்து இளைஞர் மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
அடிக்கல் நடும் பூஜை வழிபாடுகளை சிவஸ்ரீ சண்முகம் வசந்த குருக்கள் நடாத்தி வைத்ததுடன் அடிக்கல் நடும் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். தொடர்ந்து அதிதிகள் அனைவரும் அடிக்கல்லினை நாட்டி வைத்தனர்.
முதலாம் கட்டமாக இக்கட்டடத்தின் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டதுடன் தொடராக இவ்வேலைத்திட்டம் முன்கொண்டு செல்லப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.