(எம்.எம்.றம்ஸீன்)
இலங்கை நூலக சங்கத்தின் 18வது தேசிய ஆய்வு மாநாடு முதன் முதலாக கிழக்கு மாகாணத்தில் தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில் நுட்பவியல் பீடத்தின் கேடபோர் கூடத்தில் இடம்பெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட உதவி நூலகர் கலாநிதி திருமதி முஹம்மட் மஸ்றூபா தலைமையில் இடம்பெற்ற இவ் ஆய்வு மாநாட்டில் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழக பதில் உப வேந்தரும்,கலை,கலாசார பீடத்தின் பீடாதிபதியுமான பேராசிரியர் எம்.எம்.பாஸில் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
ஆய்வு மாநாட்டின் முதன்மை பேச்சாளராக பேராதனை பல்கலைக்கழக நூலகர் ஆர்மகேஸ்வரன் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணன், கிழக்குப் பல்கலைக்கழக நூலகர் கலாநிதி டபிள்யு.ஜே.ஜெயராஜ், தென்கிழக்குப் பல்கலைக்கழக தொழில்நுட்பவியல் பீட தலைவர் யு.எல்.அப்துல் மஜீத்,
இலங்கை நூலக சங்கத்தின் தலைவர் பிருத்தி லியனகே,யாழ்ப்பாண பல்கலைக்கழக பதில் நூலகர் கலாநிதி திருமதி கே.சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
இங்கு பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதிகளுக்கு நினைவுச்சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் மாநாட்டு மலரும் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இம்முறை நடைபெறும் தேசிய மாநாடு நூலகங்கள் மற்றும் சமூகத்தின் இணைப்பு, சமூகத்தின் மூலம் பிணைப்பினை வலுப்படுத்தல் எனும் தொனிப்பொருளில் இடம்பெறுவதுடன் விசேடமாக இலங்கையில் மும்மொழிகளிலும் இல் ஆய்வு மாநாடு நடத்தப்படுவது விசேட அ ம்சமாகும்.


