( வி.ரி.சகாதேவராஜா)
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன சுயாதீன ஊடகவியலாளர் திருமதி சாய் விதுஷா அஜித் தமிழ் பெண் ஆளுமை விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
“விழித்தெழு பெண்ணே” என்னும் மகுடத்தின் கீழ் கனடா சர்வதேச பெண்கள் அமைப்பு இந்நிகழ்வை நடத்தியது.
கண்டி கோல்டன் கிரவுண்ட் மண்டபத்தில் நேற்று முன்தினம் தமிழ் பெண் ஆளுமைகளின் விருது விழா சிறப்பாக இடம் பெற்றது .
அந்த நிகழ்வில் கொழும்பில் வாழும் மட்டக்களப்பைச் சேர்ந்த திருமதி சாயிஅஜித் பெண்ணாளுமை விருது பெற்றுக் கொண்டார்.