கொக்கட்டிச்சோலையில் இல்ல விளையாட்டுப் போட்டி

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட கொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணமிஷன் வித்தியாலயத்தில் இன்று இல்ல விளையாட்டுப் போட்டி இடம்பெற்றது.

ஒலிம்பிக் தீபம் ஏற்றுதலுடன் ஆரம்பமான நிகழ்ச்சியில் அஞ்சல் ஓட்டம், 100 மீட்டர் ஒட்டம், அணிநடை மரியாதை, உடற்பயிற்சி கண்காட்சி போன்றன நடைபெற்றன.

இதன் போது விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் மேலும் சம்பியன்களாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வெற்றி கிண்ணங்களும் வழங்கப்பட்டன. இல்ல சோடணை, இல்லங்களில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற இல்லங்களுக்கான பரிசில்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வித்தியாலய அதிபர் சு. ரவிஷங்கர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வலயக்கல்விப் பணிப்பாளர் யோ. ஜெயச்சந்திரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் மூ. உதயகுமாரன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.