ஆலயத்துக்குள் அத்துமீறி புகுந்த வாகனம்.

(வி.ரி.சகாதேவராஜா)   இன்று அதிகாலையில் (09)  ஆலயத்துள் அத்துமீறி புகுந்து விபத்துக்குள்ளான கார்வாகனத்தால் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
இச் சம்பவம் இன்று (9) செவ்வாய்க்கிழமை அதிகாலை காரைதீவு விபுலானந்த சதுக்க முச்சந்தியில் இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தால் காருக்கும் ஆலயமதிலுக்கும் சேதமேற்பட்டுள்ளது.
கார்ச்சாரதி தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
இதுபற்றி மேலும் தெரியவருவதாவது..
கொழும்பில் இருந்து கல்முனை சென்றடைய வந்த கார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது .
மோட்டார் வாகனமானது காரைதீவு பிரதான வீதி முச்சந்தியில் அமைந்திருக்கும் அரசடிப் பிள்ளையார் ஆலயத்தின் மதிலினை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றுள்ளது .
 மேலதிக விசாரணைகளை காரைதீவு பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்..