(க.சரவணன்) மானிப்பாய் மருதடிவிநாயகர் ஆலய பகுதியில் நிர்மானிக்கப்பட்டுள்ள மலசலகூடம் பாவிக்கமுடியாதளவு உடைந்து சீரழிந்துள்ளதால் ஆலையத்துக்குவரும் பக்தர்கள் மலசலம் கழிக்க முடியாது பல்வேறு சௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆலையத்திற்கு மலசல கூடம் தேவை என்ற அடிப்படையில் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் மானிப்பாய் மேற்கு எழுமுள்ளிப்பகுதியைச் சேர்ந்த பலரது உதவியால் பல இலட்சம் ரூபா செலவில் ஆண் பெண் ஆகிய இருபாலாரும் பாவிப்பதற்காக மலசல மூடம் நிர்மானித்து கொடுக்கப்பட்டு பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது
அதன் பின்னர் ஏற்பட்ட ஆலய நிர்வாக மாற்றங்களினால் பல இழுபறிகழினாலும் கோயில் நிர்வாகத்தை அரசு பொறுப்பேற்று பெறுநகர் குழவிடம் ஒப்படைக்கப்பட்டது
இந்த நிலையில் கடந்த 22 ம் திகதி வருடாந்த உற்சவம் ஆரம்பித்து 25 நாட்களுக்கு தொடர்ந்து திருவிழா இடம்பெற்று வருகின்றதையடுத்து அங்கு ஆலையத்தை தரிசிக்க தினமும் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு உள்நாட்டு பக்;தர்கள்;; வருகின்றனர் இவர்கள் மலசலம் கழிப்பதற்கா அங்குள்ள மலசலு கூடத்திற்கு சென்றால் அங்கு அதனை பாவிக்கமுடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாக பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்
எந்த ஒரு சமய அனுட்டானங்களிலும் சுத்தம் பேணுவது கட்டாயமான ஒன்றாக இருக்கும் வேளையில் மலசல கூடம் பற்றிய கரிசனையை ஏன் நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை அதேவேளை நகரசபை, சுகாதார உத்தியோகத்தர்கள், கூட தங்கள் பொறுப்பையும் கடமையையும் கவனிக்கவில்லை
இந்த மலசல கூடம் நிர்மானிப்பதற்கு கரிசனையோடு செயற்பட்ட அரியரட்ணம். கிருஸ்ணதாசன் ஆகிய நான் இது தொடர்பாக சம்மந்தபட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்தேன் இதுவரை பலனஜல்லை எனவே உரிய அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோட்டுக் கொள்கின்றனர்