வடக்கில் அமைச்சருக்கு நேற்று நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சருக்களுக்கும் நடக்கும் – சாணக்கியன் எம்.பி

மட்டக்களப்பு மாவட்டம் போரதீவு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட திக்கோடை கிராமத்தில் நேசக்கரங்கள் சமூக நல அமைப்பின் சாதனையாளர் பாராட்டு விழா இன்று (06) அறிவொளி கல்வி நிலையத்தில் ,நேச கரங்கள் அமைப்பின் தலைவர் ந. கதிரவன் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன், தமிழ் மக்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழரசுக்கட்சி போராடும் எனவும் , மக்களின் வரிப்பணத்தில் நடைபெறும் அபிவிருத்தி திட்டங்கள் , மக்களுக்கு திருப்தி அளிக்காதவிடத்து வடக்கில் அமைச்சருக்கு நேற்று நடந்த அதே நிலை கிழக்கிலும் உள்ள அமைச்சருக்களுக்கும் நடக்கும் எனவும் , மக்களால் வெகுவிரைவில் துரத்தியடிக்கப்படுவார்கள் எனவும் , ஜனாபதி தேர்தலை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக தமிழ் மக்கள் காணப்படுவார்கள் எனவும் நிகழ்வில் கலந்து கொண்ட கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்தார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் அவர்களால் சாதனையாளர்களுக்கான நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.