ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கூட்டம் நடாத்தாமை பாரபட்சம்!! கல்முனையில் சிறிதரன் எம்பி. முழக்கம்.

( வி.ரி.சகாதேவராஜா) நீதிமன்றத்தில் நிர்வாகம் தொடர்பான வழக்கு நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான அதிகாரங்களை பறிப்பது  நீதிமன்றை அவமானப்படுத்தும் செயலாகும்.
இவ்வாறு இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் கல்முனையில் தெரிவித்தார்.
இங்கு பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவராக ஒரு பாராளுமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.ஆனால் இதுவரை அவர் இந்த பக்கமே தலை காட்டவில்லை. ஒரு கூட்டத்தையும் கூட்டவில்லை. இது எந்த நாட்டில் உள்ள சட்டம் ? இதுவொரு பச்சைப் பாரபட்சம்.நீதி இல்லையா? இவ்வாறு கேள்வி எழுப்பினார் அவர்.
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் நிர்வாக பிரச்சனைகள் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக பத்தாவது நாளாக நேற்று (3) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
அங்கு அவர் சமுகமளித்து போராட்ட மக்களுடன் சிலமணி நேரம் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 இதன் போது அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் ,முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான  கே. கோடீஸ்வரன், பா.அரியநேத்திரன், சீ,.யோகேஸ்வரன், காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் , தமிழரசு கட்சியின் முன்னாள் வேட்பாளர் செல்வராசா கணேஷானந்தம் உள்ளிட்ட பலர்  பங்கேற்று இருந்தனர்.
 தமிழ் அரசுக் கட்சியின் தலைவரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மேலும் தெரிவிக்கையில்…
அடிப்படையில் அம்பாறை மாவட்டத்தில் நிரந்தரமாக வாழும் தமிழ் மக்களை நிரந்தரமாக துரத்தி அடிப்பதற்கு இன்னொரு சமூகம் கையாளுகின்ற யுக்தி போன்று இதனை  நாங்கள் பார்க்கின்றோம்
முழுக்க முழுக்க தமிழ் மக்கள் வாழ்கின்ற பிரதேசத்தில் உள்ள நிர்வாக அலகான பிரதேச செயலகம் செயற்படக் கூடாது என்பதில் ஏனிந்த கொலைவெறி.
அந்த பிரதேசத்திற்கான அதிகாரங்களை பறிப்பதற்கு பலரும் முயற்சி செய்கின்றார்கள். குறிப்பாக
கல்முனை தெற்கு பிரதேச செயலாளர் செலுத்துகின்ற அதிகாரத்திற்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் துணை போவதும் நீதிமன்றத்தை அவமதிக்கும் குற்றச் செயல் .
இங்குள்ள பிரதேச செயலாளர் சுமூகமாக சுதந்திரமாக தனது பணிகளை முன்னெடுக்க வேண்டும்.
இங்கு 300 உத்தியோகத்தர்கள் பணியாற்றுகிறார்கள் .ஆனால் அதன் அதிகாரங்களை பறிப்பதற்கு மறைமுகமாக அதிகார பயங்கரவாதத்தை திணிக்கிறார்கள். இலங்கை நீதியின் படி தர்மத்தின் படி சட்ட நியாயாதிபதி ஒரு அமைதியான தீர்வை இந்த மக்கள் வேண்டுகின்றார்கள்.
 ஒரு பொறுப்புள்ள தமிழ்க்கட்சி என்ற அடிப்படையிலே நாங்கள் சமாதானமாக சட்டரீதியாக இப்பிரச்சினைக்கான தீர்வுக்கு நாங்கள் ஈடுபட்டு வருகின்றோம். அது வெற்றி அளிக்கும் என்ற நம்பிக்கையும் இருக்கின்றது. என்றார்.

IMG-20240404-WA0018.jpgIMG-20240404-WA0009.jpgIMG-20240404-WA0013.jpgIMG-20240404-WA0015.jpgIMG-20240404-WA0010.jpgIMG-20240403-WA0088.jpgIMG-20240403-WA0084.jpgIMG-20240403-WA0104.jpgIMG-20240403-WA0106.jpg