மட்டக்களப்பு  மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக ராஜ்பாபு நியமனம்.

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய சமுர்த்தி பணிப்பாளராக சுந்தரமூர்த்தி ராஜ்பாபு நியமிக்கப்பட்டுள்ள நிலையில்   01.04.2024 திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலக தன் கடமைகளை பொறுப்பெற்றுக் கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தன் கடமையை பொறுப்பேற்றுக் கொண்டதுடன், தன் அலுவக பணியையும் சமுர்த்தி பிரிவில் தொடங்கியுள்ளார்.கொம்மாதுறையை பிறப்பிடமாக கொண்ட இவர், கோரளைப்பற்று தெற்கு (கிரான்) பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளராக கடமையாற்றிய இவர் தற்போது மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.