(த.சுபேசன்) சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையமானது சண்டிலிப்பாய் பிரதேச செயலகத்துடன் இணைந்து நடாத்திய இலவச நடமாடும் சேவை மற்றும் இலவச சட்ட ஆலோசனை முகாம் ஆகிய செயற்பாடுகள் 27/03 புதன்கிழமை சண்டிலிப்பாய் பிரதேச செயலக மண்டபத்தில் பிரதேச செயலாளர் திருமதி சுபாஜினி மதியழகன் தலைமையில் இடம்பெற்றிருந்தது.
மேற்படி நிகழ்வில் சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் பணிப்பாளர் திருமதி அம்பிகா சிறிதரன்,ஆட்பதிவுத் திணைக்களத்தின் உதவி ஆணையாளர்,பதிவாளர் நாயகம் திணைக்கள பிரதிப் பதிவாளர் நாயகம்,சட்ட வல்லுனர்கள்,ஆட்பதிவுத் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,இளவாலை மற்றும் மானிப்பாய் பொலிஸார்,சமாதான நீதவான்கள் கலந்து கொண்டு இலவச சேவையை வழங்கி பொதுமக்களுடைய தேவைகளை நிறைவேற்றியிருந்தனர்.
இதன்போது திருமணப் பதிவு,தேசிய அடையாள அட்டையைப் பெறல்,காலங்கடந்த பிறப்பு,இறப்பு மற்றும் திருமணச் சான்றிதழ்களைப் பெற்றுக்கொள்ளல் மற்றும் இலவச சட்ட ஆலோசனை வழங்கல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டன.
சட்டத்திற்கும் மனித உரிமைக்குமான நிலையத்தின் அனுசரணையில் இடம்பெற்ற மேற்படி நடமாடும் சேவையில் சண்டிலிப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்குள் வதியும் பெருமளவான பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.