அரச காரியாலயங்களில் மாற்றுத் திறனாளிகளிகளுக்கான அணுகுவழிப் பாதை.

(பாறுக் ஷிஹான்)  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதற்காக பல்வேறு செயற்றிட்டங்களைச் செய்த வருகிறது. 1996ம் ஆண்டின் 28ம் இலக்க அங்கவீனமுற்ற ஆட்களின் உரிமைகள் பாதுகாப்புச் சட்டத்தில் அங்கவீனமுற்ற ஆட்களின் நலனை மேம்படுத்துவதற்கும், உரிமைகளைப் பாதுகாப்பதற்குமான செயற்றிட்டங்களை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்கும் வழி வகுத்துக் கொடுத்துள்ளது.
 இப்படியான சட்டங்கள் மூலம் விசேட தேவையுள்ளவர்கள் என்பவர்கள் யாருக்கும் கீழ்பட்டவர்கள் அல்ல என்பதையும், அவர்கள் தங்களைத் தாங்களே கீழ்படுத்திக் கொள்ளக்கூடாது என்ற வகையிலும் பல ஏற்பாடுகளைச் செய்துள்ளது. இந்த வகையில் மாற்றுத் திறனாளிகளின் அணுகுவழிப் பாதை மற்றும் ஏனைய விடயங்களை கண்காணித்து அது பற்றிய சிபாரிசுகளை முன்வைப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை ஆணைக்குழு எடுக்கவுள்ளது.
இதற்கமைய District Accessibility Audit Team ஒன்றினை ஆணைக்குழுவினால் அமைக்கப்பட்டுள்ளது. இன்று(27)  கல்முனை வலயக் கல்வி அலுவலகம், மற்றும் பிரதேச செயலகம், சாய்ந்தமருது ஆகிய அரச அலுவலகங்களுக்குச்  சென்று எமது குழுவினர் பரிசீலனை செய்துள்ளனர். எதிர்காலத்தில்  மாற்றுத் திறனாளிகளிகளுக்கான அணுகுவழிப் பாதை மற்றும் ஏனைய விடங்கள் சம்பந்தமாக சிபாரிசுகளை முன் வைப்பதற்க ஆணைக்குழு முயற்சிகள் செய்து வருகிறது.
விசேட தேவையுள்ளவர்களுக்கான தொழில் வழிகாட்டல் கிடைக்கும் வழி குறைவாக இருந்தாலும் இவர்கள் சக்கர நாற்காலியில் இருந்தவாரே திணைக்களத்தின் தலைவரை அல்லது அவர் கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய ஒருவரை சந்திப்பதற்கு இலகுவாக செல்லக்கூடிய வகையில் கட்டிட அமைப்புக்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் சட்டங்கள் விசேட சுற்றறிக்கைகள் வந்துள்ளன.
இவர்களை விசேடமாக கவனிக்கும் நோக்கமானது அவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதுடன் சமூகத்தில் கௌரவமான வாழ்க்கை வாழ்வதை உறுதிப்படுத்துவது அனைவர்கள் மீதும் கடமையாகும்.