முன்னாள் ஜனாதிபதிகள் ஐந்து பேரது நடை, உடை, பாவனைகளை தற்போது விமர்சிக்கின்ற அனுரகுமார திசாநாயக்க அந்த ஐந்து ஜனாதிபதிகளின் அதிகார காலத்தில் அவர்களை ஆதரித்ததை மறந்துவிட்டு இப்போது பேசுவது வேடிக்கையாகவுள்ளதென ஐக்கிய தேசியக் கட்சியின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளர் ஏஎம்எம் பிர்தௌஸ் (26) தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் உரிமைக்கான ஆயுதப்போராட்டம் நடைபெறமுன்னர் ஜேவிபியினரே ஆயுதம் ஏந்தி உமது நாட்டின் பொருளாதாரத்தையும் சொத்துக்களையும் சீரழித்ததை மறந்துவிடமுடியாது. எனவே பொதுமக்கள் ஜேவிபி யினருக்கு வாக்களித்து பாரிய தவறுகளைச் செய்துவிடவேண்டாம். நாட்டைக்கட்டடியெழுப்பிய ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க அவர்களை மீண்டும் ஜனாதிபதியாகத் தெரிவு செய்வதன்மூலமாக எமது நாட்டை முன்னேற்றப்பாதைக்குக் கொண்டுசெல்ல வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.
மட்டக்களப்பு- ஏறாவூர்ப்பிரதேசத்தில் 225 குடும்பங்களுக்கு புனிதநோன்பினையொட்டி பேரீத்தம்பழப்பொதிகளை வழங்கும் நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஏறாவூர்ப் பிரதேசத்தில் கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக இவருக்குப் பொறுப்பளிக்கப்பட்டுள்ள றகுமானியாääறிபாய் பள்ளி மற்றும் அல்- ஜுப்ரிய்யா ஆகிய வட்டரங்களில் தலா 75 பேர் வீதம் தெரிவுசெய்யப்பட்ட 225 பயனாளிகளுக்கு பேரீத்தம்பழ பொதிகள் கையளிக்கப்பட்டன.
இவரது சொந்த நிதியிலிருந்து பேரீத்தம் பழங்கள் கொள்வனவு செய்யப்பட்டவையாகும்.
றகுமானியா வட்டாரத்தின் பதியுதீன் மஹ்மூத் பாடசாலை மண்டபத்தில் அதிபர் எம்எம். ஜலால்தீன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. சமய தலைவர்கள்ää ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் பிரதேச முக்கியஸ்தர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளர் பிர்தௌஸ் மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்க ஆகியோரின் பிறந்த தினத்தையொட்டி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
(ஏறாவூர் நிருபர் – நாஸர்)
Virus-free.www.avg.com |