தமிழ் மக்கள் கடந்த பல சதாப்த காலங்களாக அகிம்சை ரீதியாகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை என்பதை ஜே.வி.பி அனுரகுமார திஸநாயக்கா உணர்ந்து கொள்ள வேண்டும் அதேவேளை 13 திருத்த சட்டத்தின் மூலம் இணைத்த வடகிழக்கை நிரந்தரமாக பிரித்தவர்கள் தமிழ் மக்களுக்கு தீர்வு தரப் போவதில்லை
மட்டக்களப்பில் வாவிக்கரையில் அமைந்துள்ள தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரனின் காரியாலயத்தில் இன்று செவ்;வாய்க்கிழமை (26) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியான ஜே.வி.பி கட்சியின் அனுரகுமார திஸாநாயக்கா கடந்தவாரம் கிளிநொச்சியில் இடம்பெற்ற கூட்டத்தில் இனப்பிரச்சனை தொடர்பாக எந்தவொரு கருத்தையும் கூறாது தான் ஆட்சிக்கு வந்தால் மூன்று வேளை சோறுதருவேன் என்று கூறியுள்ளார்.
நாட்டிலே இரண்டு தடைவ கிளர்ச்சியை ஏற்படுத்திய புரட்சி அமைப்பான ஜே.வி.பி. 1970,1971, 1988,1989 காலகட்டங்களிலே கிளர்ச்சியை ஏற்படுத்திய அந்த அமைப்பு இலங்கையில் நடைபெற்ற அகிம்சை ஆயுத போராட்டங்களை அறியாமல் இருந்திருக்க முடியாது அப்படி இருந்து கொண்டு தான் ஆட்சிக்கு வந்தால் 3 வேளை சோறு தருவேன் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
தமிழ் மக்கள் கடந்த பல சதாப்த காலங்களாக அகிம்சை ரீதாயகவும் ஆயுத ரீதியாகவும் சோற்றுக்காக போராடவில்லை அதேவேளை இந்த நாட்டிலே ஒரு இனப்பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்றதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
தமிழ் மக்கள் ஜே.வி.பி யை நன்றாக உணர்ந்து கொண்டவர்கள் இடம்பெற்ற ஆயுத போராட்டத்திற்கு ஒரு தீர்வாக அதன் ஆரம்ப புள்ளியான 13 திருத்தசட்டம் ஊடாக வந்த மாகாணசபை முறைமையை கூட கொடுக்க கூடாது என கிளர்ந்து எழுந்தது மாத்திரமல்ல 13 திருத்த சட்டத்தில் தற்காலிகமாக இணைக்கப்பட்ட வடகிழக்கை மகிந்த ராஜபக்ஸவின் ஆசியுடன் 2006 நீதிமன்றம் நாடி இரண்டாக நிரந்தரமாக பிரித்தனார் என்பதை மறந்துவிடவில்லை
அவர்கள் தமிழ் மக்களின் வாhக்குகளை பெறவேண்டும் என்றால் பிரச்சாரம் செய்ய வேண்டுமாக இருந்தால் அவர்கள் தமிழ் மக்களுக்கு என்ன தீர்வை முன்வைக்கி ன்றார்கள் என்று தான் அவர்களுடன் எந்த விதமான உறவையும் கொண்டிருக்கலாம்
இரண்டு கிழமைக்கு முன்னர் பாராளுமன்ற கட்டிடத்தில் 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்துவது சம்மந்தமாக சந்திப்புக்கள் இடம்பெற்றது அதில் பொலிஸ் அதிகாரம் வழங்கமுடியாதுஎன்றனர். எங்களை பொறுத்த மட்டில் 13 திருத்த சட்டத்தை அமுல்படுத்துவதாக இருந்தால் பொலிஸ் அதிகாரம் உட்பட அதில் கூறப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்களும் பகிரப்பட்டு அமுல்படுத்த வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்.
ஏன் உன்றால் நீதிமன்ற தீர்ப்புகளை அமுல்படுத்துவது பொலிசார் அவர்கள் மாகாணத்தின் கீழ் இருந்தால் தான் அந்த அந்த மாகாணங்களில் நடைபெறும் நீதிமன்றினால் எடுக்கப்படும் ஆணைகளை அவர்கள் நிறைவேற்ற கூடியவர்களாக இருப்பார்கள். நல்ல ஒரு உதாரணம் குருந்தூர்மலை தொடர்பாக நீதிமன்றம் கொடுத்த ஆணையை மத்திய அரசிலுள்ள பொலிசார் நடைமுறைப்படுத்த வில்லை
அதேபோல மகாவலிஅதிகார சபைக்கு நீதிமன்றம் மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களுக்கு அதிதுமீறி துன்புறுத்துபவர்களை வெளியேற்றுமாறு உத்தரவிட்டது ஆனால் பொலிசார் இன்று வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை மாகாணசபை நன்றாக இயங்கவேண்டும் என்றால் பொலிஸ் அதிகாரம் உட்பட அனைத்தையும் வழங்கவேண்டும் மிகவும் உறுதியாக இருக்கின்றோம் என்றார்.
ReplyForward
|