ஐதேக பொதுச் செயலாளர் ரங்கே பண்டார மட்டக்களப்பில் தெரிவிப்பு.
( ஏறாவூர் நிருபர் – நாஸர் )
எமது நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கமைவாக இவ்வருடம் முதலில் ஜனாதிபதித் தேர்தலே நடைபெறுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்குத் தேவையான நிதியினை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்கியுள்ளதாகவும் அவர் கூறினார்.
மட்டக்களப்பில் இன்று 21.03.2024 நடைபெற்ற விசேட வைபவமொன்றில் உரையாற்றுகையிலேயே பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இதனைக்குறிப்பிட்டார்.
மட்டக்களப்புää பட்டடிருப்பு மற்றும் கல்குடா ஆகிய தேர்தல் தொகுதிகளிலுள்ள பிரதேச அமைப்பாளர்களுக்கு நியமனக்கடிதங்கள் கையளிக்கவென இந்நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
43 பிரதேச அமைப்பாளர்கள் இந்நிகழ்வில் நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு பொது நூலக மண்டபத்தில் நிகழ்வு நடைபெற்றது.
அமைப்பாளர்கள் எதிர்காலத்தில் செயற்படவேண்டிய முறைகள் குறித்து இதன்போது அறிவுறுத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச்செயலாளர் பாலித்த ரங்கே பண்டார இங்கு தொடர்ந்து பேசுகையில் – எதிர்வரும் செப்டம்பர் பிற்பகுதியில் அல்லது ஓக்டோபர் முதல் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளது என்று கூறினார்.
இந்த நாடு கடந்தசிலவருடங்களில் இருந்த நிலை மாற்றப்பட்டுள்ளது. ஆரசாங்க ஊழியர்களது சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. எட்டு இலட்சமாக இருந்த சமுர்த்தி பயனாளிகள் 24 இலட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளனர். கூடியது 4500 ரூபாவாக இருந்த சமுர்த்தி கொடுப்பனவு அஸ்வெசும திட்டத்தின் மூலமாக 15 ஆயிரம் ரூபாவினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு உர மானியம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறாக பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் நிவாரணம் வழங்க அரசாங்கம் தயாராகவுள்ளது.
எனவே எதிர்காலத்தில் மக்களைப்பாதிப்புக்குள்ளாக்கும் ஜனாதிபதி வேண்டுமா அல்லது நாட்டைம மீட்சிபெறச்செய்யும் ஜனாதிபதி வேண்டுமா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
கல்குடா பிரதேச அமைப்பாளர் கலாநிதி எம்பீ. முஸம்மில் இங்கு வரவேற்புரை நிகழ்த்தினார்.