மலிவு மற்றும் இலவச விற்பனை நிலையம் திறப்பு விழா
( வாஸ் கூஞ்ஞ)
மன்னார் மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உள்ளுர் உற்பத்திகள் மற்றும் உணவுசார் விற்பனை காட்சியறையும் புவம்பெயர் உறவுகளின் நிதிப்பங்களிப்புடனான வறிய மாணவர்களுக்கான இலவச கற்றல் உபகரணம் வழங்கலும் மலிவு விற்பனைக்காட்சியறை திறப்பு விழாவும் இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட செயலக வளாகத்தில் வியாழக் கிழமை (21) காலை 8.30 மணியளில் மன்னார் மாவட்டக் கைத்தொழிலாளர் சங்கத்தின் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் கலந்து கொண்டதுடன் வறிய மாணவர்களின் கல்வியில் அக்கறைக் கொண்டுள்ள புவம்பெயர்ந்து வாழும் அமைப்புக்களின் பிரதிநிதிகளாக புலம்பெயர்ந்து வாழும் த.இளங்கோ மற்றும் த.அருண் ஆகியோருடன் டிலாசல் சபை அருட்கோதரர் மனோ அவர்கள் , மேலதிக அரசாங்க அதிபர் , பிரதம உள்ளக கணக்காய்வாளர் , புலம்பெயர் உறவுகளின் அமைப்புகளின் பிரதிநிதிகள் , உதவி மாவட்ட அரசாங்க அதிபர் , மாவட்ட கைத்தொழில் அபிவிருத்தி சபையின் உதவிப் பணிப்பாளர் ஜே.எம்.ஏ,லெம்பேட் , புலம்பெயர் அமைப்புக்களின் மன்னார் இணைப்பாளர் திருமதி மதுரா , மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் , உள்ளூர் கைத்தொழில் சங்கத்தின் உறுப்பினர்கள் என பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.