மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் கல்குடா ,பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்களான எஸ்.சுதர்சனன்,கலாநிதி முசாமில் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொண்டு அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்துள்ளதுடன், கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் ‘சிறிகொத’வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொறுப்பாளராக உள்ள திருமதி.துஷாரி பெரேரா உள்ளிட்டதொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயற்பாட்டாளர்கள்இ,முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள், முன்னைய தேர்தல்களின் வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும்கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு கட்சியின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,
எமது ஜனாதிபதி அவர்கள் சொல்லியிருந்தார் எமது கட்சியை வளர்த்து செல்லக் கூடிய உறுப்பினர்களை சேர்த்து எமது கட்சியை வளப்படுத்துங்கள் என்று அதற்கு அமைவாகவே நாம் கட்சியை வளர்த்து எடுப்பதற்காக இவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.
மூன்று தொகுதிகளுக்கு முதலில் 3 பேரை நியமித்தோம். தற்போது 43 பேரை நியமித்துள்ளோம்.
உங்களது பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை எமக்கு அறிவித்து எம்மூடாக உரிய அமைச்சிற்கு அறிவித்து அவற்றை நிவர்த்தி செய்ய நாங்கள் முன்னின்று உழைப்போம்.
இன்று கட்சியினால் நியமிக்கப்படுபவர்கள் ஊரில் சென்ற சண்டி தனம் காட்ட கூடாது, மண் கொள்ளையில் ஈடுபட கூடாது மக்களுக்காக செயற்பட வேண்டும்.
நீங்கள் தற்போதிலிருந்து நிருவாகிகளாக மாறுகின்றீர்கள்.
முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே இடம் பெறவுள்ளது. ஒரு சிலர் ஊடகங்களுக்கு முன் வந்து சொல்கின்றனர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெற வேண்டும் என்று ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலே இடம் பெற வாய்ப்பு உள்ளது.
அது மட்டுமல்லாது ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என்று.
நோன்பு முடிய மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் பாரிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
விவசாயிகளை ஊக்குவிக்க பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.
யாரு வந்தாலும் மக்களின் குறைகளை தீர்க்க கூடிய ஜனாதிபதி எமது கட்சியிலே இருக்கின்றார்.
அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ளது அதற்கும் இன்று நியமிக்கப்படும் நீங்கள் கட்சிக்காக வேலை செய்வதற்கு முன்னிக்க வேண்டும்.