காத்தான்குடியில் ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகள் கைது 72 மணித்தியாலம் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாரணை

Stop sign icon vector illustration with shadow on white background.

கனகராசா சரவணன்)

காத்தான்குடியில் போதை பொருள் வியாபாரி இருவர்களை நேற்று செவ்வாய்கிழமை (19) கைது செய்ததுடன் கடந்த ஒருவாரத்தில் 5 போதை பொருள் வியாபாரிகளை கைது செய்து நீதிமன்ற அனுமதியை பெற்று 3 நாட்கள் பொலிஸ் தடுப்பில் வைத்து விசாணை மேற்கொண்டு வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

யுக்தி நடவடிக்கையின் கீழ் காத்தான்குடி பொலிசார் போதை பொருள் வியாபாரிகளை தேடி தேடி கைது செய்துவருகின்ற நிலையில் கடந்த செவ்வாய்கிழமை தொடக்கம் நேற்று 19 ம் திகதி செவ்வாய்க்கிழமை இரண்டு வியாபாரிகள் உட்பட 5  வியாபாரிகளை 3 கிராம் தொடக்கம் 400 மில்லிக்கிராம் வரையிலான ஜஸ் போதை பொருளுடன் கைது செய்யப்பட்டனர்.

இதில் iகைது செய்யப்பட்ட 5 பேரும் காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயது தொடக்கம் 50 வயதுக்கு உட்பட்டவர்கள் எனவும் இவர்களை நீதிமன்ற அனுமதியை பெற்று 72 மணித்தியாலயமான 3 நாள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை மேற்கொண்டுவருவதாகவும் விநாரணையின் பின்னர் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.