பிரதேச சர்வ சமயக் குழு மற்றும் தொடர்பாடல் மையமும் இணைந்து மன்னாரில் மகளீர் தினம்

வாஸ் கூஞ்ஞ)

செவ்வாய் கிழமை (19) சர்வதேச மகளீர் தினத்தை முன்னிட்டு; மன்னார் பிரதேச சர்வ சமயக் குழு மற்றும் தொடர்பாடல் மையமும் இணைந்து மன்னார் ஆகாஷ் ஹொட்டலில் இத்தினம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக முன்னாள் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் கலந்து கொண்டதுடன்

சிறப்பு விருந்தினராக மன்னார் நகர் பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி ரி.திவாகிரி கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் மன்னார் பிரதேச சர்வ சமயக் குழு உறுப்பினர்கள் , பொலிசார் , மறைக்கல்வி மற்றும் அறநெறி பாடசாலை ஆசிரியைகள் , மற்றும் அமைப்புக்களின் மகளீர்கள் இதில் கலந்து கொண்டனர்.

செவ்வாய் கிழமை (19) காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 2.15 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வுக்கு வளவாளர்களாக சட்டத்தரனி திருமதி புராதினி சிவலிங்கம் மற்றும் சட்டத்தரனி திருமதி ஜூனைட் நூவிலா ஆகியோரும் கலந்து கொண்டு பெண்கள் உரிமை மற்றும் முக்கிய சட்ட நுணுக்கங்களைப் பற்றி தெளிவுப் படுத்தினர்.