குடும்பமயமான மத்திய வங்கி.

நாட்டின் நிதிக் கொள்கையை அரசியல் ரீதியிலான தலையீடுகள் இன்றி  நடைமுறைப்படுத்துவதற்காகவே மத்திய வங்கியை சுயாதீனப்படுத்தும் புதிய சட்டங்கள்  கொண்டு வரப்பட்டன. தொடர்ச்சியாக பணத்தை அச்சடித்து இந்நாட்டில் பணவீக்கத்தை ஊக்குவித்ததன் காரணமாக இந்நாட்டின் நிதிக்கொள்கை குடும்பமயமானது. எனவேதான் இதனை சுயாதீன கட்டமைப்பாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இவ்வாறான நிலையில், நாட்டில் உள்ள தனியார் மற்றும் அரச ஊழியர்களுக்கு தியாகங்களை செய்யுமாறு கோரிக்கொண்டு, மறுபுறம் மத்திய வங்கி ஊழியர்களுக்கு 70 வீத சம்பள உயர்வை பெற்றுக்கொள்ள முடியாது. மத்திய வங்கிக்கு இத்தகைய தார்மீக உரிமை இல்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.